Saturday, January 30, 2010

ஞானப்பழம் வேண்டி தாய்தந்தையருடன் வாக்குவாதம் கொண்டு பழனியில் ஆவினன்குடியில் தண்டம் பிடித்ததால் அம்மையப்பரின் அருளால் ஞானம் பெற்று தண்டாயுதபாணி ஆனார். பிரம்மன் சப்தம் ஏதும் இல்லாத உயிர்களைப் படைத்து வர முருகன் இதைக்கண்டு பிரம்மனை அழைத்து ஓம் எனும் ப்ரணவத்தின் பொருள் கேட்க அவர் அதையறியாது நிற்க, அவர் தலையில் குட்டி ப்ரம்மனை சிறையிலிட்டு படைப்புத்தொழிலை முருகனே ஏற்று சப்தங்கள் உடைய உயிர்களைப் படைத்தார். இதனாலேயே ஓம் என்ற அக்ஷரம் தோன்றியது. இதன் பொருளை சிவபெருமான் கேட்க அவருக்கு உபதேசித்தார். தகப்பனுக்கே பாடம் சொல்லி தகப்பன்சாமி ஆனார். திருமாலுக்கு, அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற இரண்டு பெண்களில் அமுதவல்லி தேவமங்கையாகவும்(தெய்வானை), சுந்தரவல்லி பூவுலகமங்கையாகவும்( வள்ளி) வாழ்ந்த போது குமரனை அடைய தவம் இருந்ததின் பேரில் குமரனின் அருளால் இருவரும் வரம் பெற்றனர். தேவர்குல தலைவன் தேவேந்திரனின் விருப்பத்தால் அவரது மகள் தெய்வாணையை மணந்து சுப்பிரமணியன் ஆனார். வள்ளியை திருத்தணிகையில் காதல் மணம் புரிந்தார். குமரனை நினைத்து வழிபட்டவர்களுக்கெல்லாம் அருள்பாலித்து வரும் அற்புதக் கடவுளாக கந்தன் விளங்குகிறார். குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மனம் ஒன்றி கந்தனை அழைத்தால் மனதுருகி வந்தருள்வார். கந்தனின் அருளைப் பெற்றவர்கள் ஏராளமானனோர். அத்தகைய கந்தனின் அருளைப் பெற நாம் அனைவரும் முயற்சிப்போமாக.

No comments:

Post a Comment