Saturday, January 30, 2010

ஸ்கந்த தரிசனம்

தோற்றுவாய்
முன்னொரு காலத்தில் சூரபத்மன் என்றொரு அசுரவேந்தன் தேவர்களை கொடுமைப்படுத்தியதன் விளைவாக தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டு அதன் விளைவாக சூரபத்மனை அழித்து தேவர்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஜோதிவடிவமாக முருகப்பெருமான் ஆறு பொறிகளாக தோன்றி கங்கையால் சுமந்து செல்லப்பட்டு சரவணப் பொய்கையில் இட்டதால் முருகன் காங்கேயன் எனப்பட்டார், ஆறு கார்த்திகைப் பெண்களால் முலைப்பால் ஊட்டி வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் எனப்பட்டார். பார்வதி அம்பிகையின் கரத்தில் சேர்த்தவுடன் ஆறுவடிவம் கொண்டிருந்தவர் ஒருவடிவமாகி ஸ்கந்தன் ஆனார். சோமசுந்தரக் கடவுள் தோன்ற சோமஸ்கந்தமூர்த்தி ஆனார். சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் வேண்டிக்கொண்டதால் முருகப்பெருமான் வீரபாகுத்தேவரை தூது அனுப்பி திருந்தச் செய்தும் பலனின்றி தானே நேரடியாக போர் செய்து சூரபத்மனை வதம் செய்தபோது சூரபத்மன் முதலில் மரமாகி நின்றான். கந்த பெருமானின் சக்திவேல் அவனை இருகூறாகப் பிளந்து சேவலாகவும், மயிலாகவும் மாறி கந்தனின் அருளால் சேவலைக் குமரனின் கொடியாகவும், மயிலைத் தன் வாகனமாகவும் ஆக்கிக் கொண்டார். சூரபத்மனை வதம் செய்து தேவர்களைக் காத்தார்.

No comments:

Post a Comment